பொது ஜன பெரமுன கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாரை மாவட்ட
அமைப்பாளர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணி கட்சியின் அம்பாறை மாவட்ட
அமைப்பாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இன்று (11)அம்பாறை மொண்டி ஹோட்டலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜய விக்ரம பொதுஜன முஸ்லிம் பெரமுன கட்சியின் தேசிய செயலாளர் சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ஜே.கலீல் ரஹ்மான் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணி கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம் எம்.இர்ஷாத் (அதாப்) மற்றும் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.





