கொச்சிகடை பெண் கொலை மற்றும் இருவரை படுகாயப் படுத்திய சம்பவ சந்தேக நபர் சிக்கினார்.

0


கொச்சிகடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்கால பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு
பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி 33 வயதுடைய பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, மேலும் 61 வயதுடைய பெண் ஒருவரையும் 9 வயது சிறுமி ஒருவரையும் படுகாயமடையச் செய்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த 13 ஆம் திகதி மாலை 5 மணி அளவில் மெல்லவகெதர சந்தியில் வைத்து, நீர்க்கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

25 வயதுடைய கோபிவத்த, அம்பலயாய, கடான பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டு ஒன்றும் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் நேற்று (14) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top