மழையிலும் அணையாத தேசிய மக்கள் சக்தி

0
நாட்டின் அபிவிருத்திக்கு அடிப்படையாகவுள்ள அனைவருக்கும் சமநீதி, இலஞ்ச ஊழலற்ற நிர்வாகம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை ஆகிய பிரதான மூன்று பகுதிகளூடாக நாட்டை முன்னேற்றுவது எமது இலக்காகும்" நேற்று மாலை (14.10.2019) அகுறஸ்ஸயில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஜனாதிபதி வேட்பாளர் அனுரா குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

கடும் மழைக்கு மத்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டை முன்னேற்ற வேண்டுமென்றால் முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். சமநீதி, இலஞ்ச ஊழலற்ற நிர்வாகம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை என்பனவே அவையாகும்.

எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. அதாவது முஸ்லிம்களில் உள்ள சில தீவிரவாதிகள் கட்டுவாப்பிடிய கிறிஸ்தவ தேவாலயத்தை தாக்கினார்கள். சில சிங்கள தீவிரவாதிகள் திகன மற்றும் அலுத்கமையில் முஸ்லிம்களை தாக்கினார்கள். ஆனால் அரசியல் காரணங்களால் பயங்கரவாத யுத்தத்தை முடித்த இலங்கை இராணுவத்தால் மேற்படி பயங்கரவாத குழுக்களுடன் நேருக்கு நேர் மோத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . இதுதான் எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்குள்ள அச்சுறுத்தலாகும். மேலும் எந்தவொரு பயங்கரவாத, இனவாத குழுக்களுடன் எவ்வித தொடர்பும் அற்ற அமைப்பே தேசிய மக்கள் சக்தியாகும். எனவே எமக்கு வாக்களித்து ஊழலற்ற ஆட்சியின் பங்குதாரர்களாக மாறுங்கள்.

மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோப் ஆணைக்குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கருத்து தெரிவிக்கையில், தற்போது களத்தில் இறங்கியுள்ள கோத்தாபய நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றார். ஆனால் அவர்களை சுற்றி திருடர்கள் உள்ளதால் நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்த முடியாது. இன்னும் சிலர் இவர் வந்தால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படலாம் என பயந்து சஜித்துக்கு வாக்களிக்கவுள்ளனர். ஆனால் அவர் வந்தாலும் நாட்டில் மாற்றம் எதுவுமில்லை. ஏனெனில் அவரை சுற்றி மத்திய வங்கியை கொள்ளையிட்ட திருடர்கள் உள்ளனர்.
கோத்தாபய ராஜபக்ஷாவின் மனைவிக்கு அமெரிக்காவில்தான் வாக்களிக்க முடியும். அவர் மருந்தெடுக்க செல்வது சிங்கப்பூருக்கு, அவரின் வங்கிக் கணக்குகள் சுவிட்சர்லாந்தில் உள்ளது. பொருட்கள் (Shopping) வாங்க செல்வது பங்கொக் (Bangkok) எனவே இவரை எமது நாட்டு பிரஜையென கூற முடியாது.
நான் கோப் ஆணைக்குழுவின் மூலம் மத்திய வங்கி கொள்ளை பற்றி ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவித்ததால் மக்கள் என்னை பாராட்டுகின்றனர். ஆனால் நான் சொல்வது இதுதான் கோப் ஆணைக்குழு மூலம் திருடர்கள் பிடிக்காமல் அதை மூடிவிட்டு திருடர்கள் இல்லாத அரசை உருவாக்க வேண்டும். எனவே இதற்காக எம்முடன் கைகோர்க்கவும்.

நேற்று மாலை அகுறஸ்ஸ திப்பட்டுவாவ சந்தியில் கடும் மழைக்கு மத்தியில் திறந்த வெளியில் இக்கூட்டம் இடம்பெற்றது. மேலும் கடும் மழைக்கு மத்தியில் கூட்டத்திலிருந்து இடைநடுவில் செல்லாமல் முதியோர்கள், தாய்மார்கள் தமது குழந்தைகளுடன் குடைகளுக்குள் இருந்த வண்ணம் இக்கூட்டத்தை கண்டுகளித்தனர். தேசிய மக்கள் சக்தியின்ஜனாதிபதி வேட்பாளர் அனுரா குமார திசாநாயக்க, கோப் அமைப்பின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, பேராசிரியர்கள் மற்றும் கலைஞர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் நாடளாறவிய ரீதியில் சுமார் 32 அமைப்புகள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top