ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவது உறுதியானது ! நாளை கட்டுப்பணம் செலுத்துகிறார்..

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாளைய தினம் அவர் சுயாதீன வேட்பாளராக  கட்டுப்பணம் செலுத்துவதாகவும் நாளை மறுதினம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

முஸ்லிம்களின் இருப்பு பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தான் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

பல்வேறு மட்டங்களில் உள்ள முஸ்லிம் தரப்புக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top