பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg கட்டியொன்றை வெட்டி அகற்றி சாதனை படைத்த டாக்டர்கள்!
-அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சம்பவம்!
கடந்த (05)ஆம் திகதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்த்துள்ளார்.
சுமார் 2 மணிநேர முயற்சியின் பயனாக குறித்த பெண்ணின் வயிற்றிலிருந்து மேற்படி சதைக்கட்டி அகற்றப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
19.5 Kg நிறையுடைய சுமார் 48cm நீளமும், 34cm அகலமும், 23cm உயரமும் கொண்ட பெரும் கட்டி ஒன்றையே வெட்டி அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

