ரணிலின் திடீர் நடவடிக்கை! சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரின் பதவிகள் பறிப்பு

0

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முக்கிய சகாக்கள் இருவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வரும் அஜித் பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய்க கட்சியின் ஒழுக்காற்று குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கட்சியின் ஒழுக்காற்று குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது.

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியமை மற்றும் தலைமைத்துவத்தை இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.

ஒழுக்காற்று விசாரணகைளில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் இருவரும் இரண்டு தடவைகள் முன்னிலையாகத் தவறியுள்ளதுடன், இறுதியில் எழுத்து மூலம் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த எழுத்து மூல விளக்கங்கள் ஒழுக்காற்று குழுவினை சவால் விடுக்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top