இறக்காமம் தனியார் வகுப்பில் ஆசிரியர் மாணவனை மிருகத்தனமாக தாக்கியதால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாணவன் வைத்தியசாலையில்

0


இறக்காமம் மூன்றாம் பிரிவில் அமையப் பெற்ற தனியார் வகுப்பு ஒன்றில் இரவு நேர கணிதப் பாடத்திற்க்காக சென்ற மாணவன் ஆசிரியரிடம் தனக்கு பாட நேரத்தில் கணிதப் பாடம் விளங்கவில்லை என்று சொன்னதற்காக கணித பாட ஆசிரியர் மாணவனை மிருகத்தனமாக தாக்கியுள்ளார.

 இது தொடர்பாக இறக்காமம்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த பின்னர் மாணவன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பாடசாலை நேரங்களில்  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்று கொடுக்கின்ற போதும்  பாடம் தொடர்பாக பகுதிநேர வகுப்புகளுக்குச் சென்று பணம்கொடுத்து மாணவர்கள் மேலதிக வகுப்புக்களில் கல்வி கற்று வருகின்றனர் அந்தவகையில் குறித்த ஆசிரியர் பணத்தை பெற்றுக்கொண்டு மாணவனுக்கு கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளார்

இது தொடர்பாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர்
அவர்கள் குறித்த ஆசிரியர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாடசாலையில் கற்றுக் கொடுக்கின்ற பாடங்களை ஒரு சில குறிப்பிட்ட ஆசிரியர்கள் பணத்துக்காக பகுதி நேர வகுப்புகளிலும் இரவு நேரங்களிலும் ஏழை மாணவர்களிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு  கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பெற்றோர்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top