மைத்திரிக்கு ஆதரவாக, இரகசிய கடிதம் அனுப்பிய தயாசிறி - நிராகரித்தார் மஹிந்த தேசப்பிரிய

0
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பதவிக்கால இறுதிவரை அவருக்கு பதவியை வகிக்க அனுமதித்து அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இரகசியமாக விடுத்த வேண்டுகோள் ஒன்றை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துவிட்டதாக அறியமுடிந்தது.
அப்படி தேர்தல் திகதி தாமதமாக அறிவிக்கப்பட்டால், டிசம்பர் மாதம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பாதிக்கப்படும் என்பதால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேற்படி முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

ஆறு வருட கால பதவிக்காலத்தை ஐந்து வருடகாலமாக குறைத்து தியாகம் செய்திருப்பதால் ஜனாதிபதிக்கு இந்த காலத்தை நிவாரணமாக வழங்குமாறு தயாசிறி தனது கடிதத்தில் கேட்டிருந்ததாக மேலும் சொல்லப்பட்டது. tn
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top