இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்

0

இலங்கை கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கிற்கும், கடுமையான வறட்சிக்கும் முகங்கொடுத்து வந்திருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் காலநிலை மாற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கையை மாற்றியிருக்கின்றன.

இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தற்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. ஏனெனில் காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படத்தக்க பாதிப்புக்களினால் இலங்கையின் வாழ்க்கைத்தர மட்டம் 5 – 7 சதவீதம் வீழ்ச்சியடையும் நிலையேற்படும் என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர எச்சரித்திருக்கிறார்.

பொருளாதாரம் மற்றும் வாணிப விஞ்ஞானத்தில் மாணவர்களுக்கான சர்வதேச அமைப்பின் கூட்டத்தொடரில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் 'இளைஞர்களை மாற்றியமைத்தல், இலங்கையை மாற்றியமைத்தல்' என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top