ஹபரனை - ஹிரிவட்டுன - தும்பிக்குளம் வனப்பகுதிக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தந்தங்களை உடைய 3 யானைகளதும் மற்றும் ஒரு பெண் யானையினதும் உடல்கள் மீட்கப்பட்டன.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை இந்த யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த யானைகளுள் ஒரு யானை கர்ப்பம் தரித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிகிரியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

