சவுதியில் முதல் முறையாக சுற்றுலா விசா, ஆடை கட்டுப்பாடுகள் தளர்வு!

0

சவுதியில் முதல் முறையாக சுற்றுலா விசா, ஆடை கட்டுப்பாடுகள் தளர்வு என்ற செய்தி வெளியாகியுள்ளது
சவுதி அரேபியா, முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக மக்கா, மதினா புனிதப் பயணம் வரும் யாத்ரீகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மட்டுமே விசா வழங்கபடும் திட்டம் நடைமுறையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை எரிபொருளில் உற்பத்தியினை மட்டும் நம்பி இருப்பதில் இருந்து மாற்றாக, சுற்றுலா விசாக்கள் வழங்குவது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் மையப்பகுதிகளில் ஒன்றாகும் .

மேலும் விஷன் 2030 என்ற பெயரில் சவுதியை நவீனமாக்கும் வகையில் பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களை சல்மான் செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பெண்களை நியமித்தது உள்ளிட்ட விஷயங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. 21 வயதைக் கடந்த பெண்கள், ஆண்கள் ஒப்புதல் இல்லாமல் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆண்கள் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் எனவும் சமீபத்தில் சவுதி அரசு அறிவித்தது.

இதுபோல் கடந்த ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், கலாச்சாரப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்களுக்கும், கலைஞர்களுக்கும் விசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று 49 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சுற்றுலா விசாக்களை முதல் முறையாக சவுதி அரேபியா வழங்குகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதீப் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச சுற்றுலாவுக் காக சவுதியை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளோம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வியப்படைவார்கள். பகிர்ந்துகொள்ள வேண்டிய பொக்கிஷங்களாக, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 5 பாரம்பரிய இடங்களும் வியக்கக் கூடிய இயற்கை அழகும் இருக்கின்றன.

49 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் விசா வழங்கும் திட்டம், நாளை (சனிக்கிழமை) முதல் செயல் படுத்தப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.

ஆடை கட்டுப்பாடு: சவுதியைச் சேர்ந்த பெண்களுக்கு மேல் உடலை முழுமையாக மூடும் வகையில் ஆடை அணிவது கட்டாயம் என்ற நிலையில், அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரத்து செய்யப்படும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஆடைகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குப் பிடித்த ஆடைகளை அணிந்து செல்லலாம் என்றாலும், பெண்கள் "அடக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இலக்கு 2030: முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கும் விசா வழங்கும் முறை நாளை தொடங்கப்பட உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 10 கோடி வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கவும் சவுதி அரசு தி்ட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாத்துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற முடியும். இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் நிலவி வரும் வேலையின்மையைப் போக்குவதற்கு இந்தத் திட்டம் உதவும் என்று நம்புகிறது.

ஆனால் அதிக எண்ணிக்கையில் வரும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பதற்கான உள்கட்டமைப்பு தற்போது இல்லை என்றாலும், வரும் காலங்களில் நாடு முழுவதும் 5 லட்சம் புதிய ஹோட்டல் அறைகள் தேவைப்படும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். புதிதாக ஒரு சுற்றுலாத் துறையை கட்டமைக்கும் முயற்சியில் சவுதி அரேபியா பில்லியன்களைக் குவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு செங்கடலில் 50 தீவுகள் மற்றும் பிற அழகிய இடங்களை ஆடம்பர ஓய்வு விடுதிகளாக மாற்றுவதற்காக பல பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்தது. கடந்த ஆண்டு, ரியாத்துக்கு அருகில் கிடியா "பொழுதுபோக்கு நகரம்" கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன, இதில் உயர்நிலை தீம் பூங்காக்கள், மோட்டார் விளையாட்டு வசதிகள் மற்றும் ஒரு சஃபாரி பகுதி ஆகியவை அடங்கும்.

ஜோர்டானிய நகரமான பெட்ராவைக் கட்டிய அதே நாகரிகத்தின் மணற்கல் கல்லறைகளுக்கு சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான மடீன் சலே போன்ற வரலாற்று இடங்களையும் சவுதி அரேபியா அரசு உருவாக்கி வருகிறது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top