மைத்திரிக்கு எதிராக தேரர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதாக ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, மைத்திரிக்கு இரண்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வண. தம்பர அமில தேரர் மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் இன்று குறித்த அடிப்படை மனித உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி பாதுகாப்பு, மகாவலி மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களை மாத்திரமே தன்வசம் வைத்திருக்க முடியும் என்றும் , ரூபவாஹினியை தனக்கு கீழ் கொண்டு வருவதற்கான அவரின் முடிவு அரசியலமைப்பை மீறுவதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டுமென அவர்கள் நீதிமன்ற உத்தரவைக் கோரியுள்ளனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top