உள்நாட்டு எல்.பி எரிவாயு 12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் நிறையுடைய பால்மா பொதியொன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவுக்கான குழு இந்த விலைக்குறைப்புத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 10 ஆம் திகதி எரிபொருளுக்கான விலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்து.

