மட்டக்களப்பில் 15 வயது சகோதரிக்கு 20 வயது அண்ணன் செய்த மிகப் பெரும் கொடூரம்

0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று சனிக்கிழமை (28) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தையாரின்; முதல் மனைவியின் 20 வயது சகோதரன் தந்தையாரின் இரண்டாவதாக மனைவியின் 15 சிறுமியான சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த இளைஞரை நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர் .

இதில் கைது செய்ததுடன் இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்து அவருடன் வாழ்ந்து வருவதாகவும் இந்த நிலையில் குறித்த சிறுமி தந்தையார் சிறிய தாயுடன் வாழ்ந்து வருவதாகவும் பாடசாலையில் கல்விகற்றுவரும் குறித்த சிறுமியான சகோதரியை கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top