தான் சிங்கள பௌத்தர்களுக்காக போராடும் பலமிக்க அமைச்சர் என்றும் எனினும் ஏனைய சகோதர இனத்தவர்களை காலால் மிதிக்கும் முயற்சி தன்னிடம் இல்லை என்றும் பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறினார்.
சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முகத்தை மூடும் ஹிஜாப் சவுதி அரேபியாவில் இருந்து நாட்டுக்கு வந்தது என்றும், முஸ்லிம் அடிப்படைவாதமும் சவுதியில் இருந்தே இலங்கைக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
சவுதி அரேபியா குறித்து முதலில் பேசுவதே நான்தான் என்றும், கடுமையான தீர்மானம் எடுப்பதற்கும் விருப்பம் உள்ளது.
எனக்கு அந்தக் கதிரையில் அமருவதற்கு வாய்ப்பு கிடைத்தால் நான் சவுதி அரேபியாவுக்கு ஒரு இலங்கையரையும் அனுப்பமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

