ஐரோப்பிய நாடு ஒன்றை உலுக்கிய மற்றுமோர் அனர்த்தம்! தொடரும் பதற்றம்

0

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பகுதியில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவில் பாரிய எரிமலை வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தால் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த திடீர் எரிமலை வெடிப்பினால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பிரபல சுற்றுலா தலமான ஸ்ட்ரோம்போலியில், கடலுக்கு அருகாமையிலேயே எரிமலை ஒன்று இருக்கிறது. இந்த எரிமலையில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு, சிறிதளவில் எரிமலைக் குழம்புகளை கக்குவது வழமையான செயற்பாடாக இருந்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து ஸ்ட்ரோம்போலி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையடிவாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும், உருகிய நிலையிலிருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலை திடீரென வெடித்து, பாரியளவில் எரிகுழம்பு வெளியேறியது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 30–க்கும் மேற்பட்ட சுற்றலா பயணிகள் பயத்தில் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்தபோது, மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அத்துடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எரிமலையில் தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டு சாம்பல் புகையை கக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதனால் இத்தாலி நாட்டின் அண்மையில் உள்ள ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top