மீனவர்களுக்கு கடற்படையின் விசேட அறிவிப்பு! உடனடியாக திரும்புமாறு எச்சரிக்கை!

0



தற்போது பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், களுத்துறை, காலி, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
இந்தக் கடல் பிரதேசங்களில் இடையிடையே கொந்தளிப்பு ஏற்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று மாலை வரை மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடலுக்குச் சென்றுள்ள மீனவர்களை உடனடியாக அருகில் உள்ள துறைமுகத்திற்கு திரும்புமாறு கடற்படை அறிவித்துள்ளது. கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார மீனவர்களைக் கேட்டுள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top