ஆயுதங்களுடன் மர்ம நபர்கள்: சம்மாந்துறையில் பதற்றம்! குவிக்கப்பட்ட இராணுவத்தினர்

0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் இருவர் அந்தக் காணி உலாவிக் கொண்டிருந்த நிலையில் காணிக்கு சொந்தமானவர் தனது காணிக்குள் சென்றவளை 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து அருகிலுள்ள இராணுவத்தினருக்கு தெரியப்படுத்திய வேளை இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு குறித்த பிரதேசத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும் அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top