நாட்டின் ஏழு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை மற்றும் இரத்திரபுரி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தத் தகவலை சுகாதார முன்னிறுத்தல் பணியகம் வெளியிட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் தென்மேற்குப் பருவ மழையுடனான வானிலை காரணமாகவே, இந்தச் சூழ்நிலை தோன்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான விசேட திட்டமொன்று இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

