ஒரு_அமைச்சர் #ராஜினாமா #செய்தால் அந்த இடத்திற்கு பதில் அமைச்சரை நியமிக்கலாமா?

0


பதில் அமைச்சர் நியமனம் என்பது, உரிய அமைச்சர் வெளிநாடு சென்றாலோ, அல்லது சுகவீனமுற்றாலோ அவருக்கு பதிலாக தற்காலிகமாக நியமிக்கும் பதவியே பதில் அமைச்சர் பதவியென்பது.

ஆனால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த அமைச்சர்களுக்கு பதிலாக பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட விடயமானது சந்தேகத்தை ஏற்படுத்துக்கின்றது அல்லவா?

நம்மவர்கள் செய்த ராஜினாமா விடயமானது அரசாங்கத்தின் அனுசரணையோடுதான் நடந்தது என்றால், இவர்களுடைய ராஜினாமா செய்தியானது யாரிடம் நியாயம் கேட்டு நடந்துள்ளது என்பது தெளிவில்லாமல் உள்ளது அல்லவா?

ஒரு ராஜினாமா விடயம் என்பது அந்த அரசாங்கத்துக்கான அழுத்தமாகவே கருதப்படவேண்டும், ஆனால் அந்த அரசாங்கத்தின் பிரதமர் இதுவரை அந்த ராஜினாமாக்களின் மூலம் பாதிக்கப்பட்டதாகவோ, அல்லது கவலையடைந்ததாகவோ தெரியவில்லை. இந்த ராஜினாமாவின் மூலம் எந்தத் தரப்பிடம் நியாயம் கோருகின்றார்கள் என்பதும் புரியவில்லை, அப்படியென்றால் இந்த ராஜினாமாக்கள் வெறும் நாடகமா, அல்லது அரசாங்கத்தை காப்பாற்றும் நடவடிக்கையா?  என்றும் என்னத்தோன்றுகிறது அல்லவா?

நாங்கள் ராஜினாமாச் செய்தது ஒரு அமைச்சருக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கு அல்ல, மாறாக எங்கள் சமூகத்துக்கு நடந்த, நடந்துவருகின்ற அநியாயங்களுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்காகவே என்று கூறும் நமது முன்னால் அமைச்சர்கள், இதன் மூலம் எந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. குறைந்தது டொக்டர் சாபிக்கு எதிரான நடவடிக்கையாகட்டும், அரச அலுவலகங்களில் குறிப்பிட்ட ஆடைகளைத்தான் அணிந்து செல்லவேண்டும் என்ற சுற்றறிக்கைகளாகட்டு்ம் இதற்கான தீர்வைக்கூட வழங்க அரசாங்கம் முன்வரவில்லை, அதேநேரம் மட்டக்களப்பு கெம்பசை அரச உடைமையாக்குவதில் பிரதமர் ரணில் அவர்கள் மும்முரமாக செயல்படுகின்ற விடயத்தையும் அறியக்கூடியதாக உள்ளது. 

நிலமை இப்படியிருக்கும்போது இவர்களுடைய ராஜினாமாக்கள் எந்த தாக்கத்தை குறிப்பிட்ட தரப்பினர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது அல்லவா?

ஆகவே நம்மவர்களின் ராஜினாமாக்கள் என்பது வெறும் நாடகமாக இருந்துவிடக்கூடாது என்பதே எங்களின் கவலையாகும். முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருமுறை ஏமாற்ற குறிப்பிட்ட தரப்பினர் என்னக்கூடாது என்பதோடு இன்று முஸ்லிம் சமூகத்துக்குள்ள ஒரே நம்மபிக்கை நீங்கள்தான் என்பதையும் மறந்து விடக்கூடாது என்பதே எங்களின் கோரிக்கையும், கவலையுமாகும்.

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top