மகியங்கனை, ஹசலக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சந்தன நிஷாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு முஸ்லிம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பொலிஸ் அதிகாரி குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஹஸலக பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா மஸாஹிமா எனும் பெண் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

