தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்துவந்த சிசிர மெண்டிஸ், கடந்த 08 ஆம் திகதி பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய பிரதானி நியமிக்கப்பட்டுள்ளார்.