மஹசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு பிணை

0
மஹசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு பிணை

மஹசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் சலனி வீரசிங்க முன்னிலையில் அமித் வீரசிங்க இன்று (4ஆம் திகதி) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டது.

தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியன இரு சரீரப் பிணைகளில் சந்தேகநபர் செல்வதற்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். மக்களை பதற்றமடைய செய்யும் வகையில் தகவல்களை வௌியிடக்கூடாது எனவும் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது எனவும் சந்தேகநபருக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மஹசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க, மேல் மாகாணத்தின் தென் பிராந்திய பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top