இளைஞன் ஒருவரின் கத்திக் குத்துக்கு இலக்கான களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக் கழகத்தின் அருகாமையில் இன்று காலை 7.10 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரை கிரிபத்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
21 வயதான களனி பல்கலைக்கழக மாணவி ஒருவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.
சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

