உச்சத்தில் பிரச்சினை : நாளைய தினம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் !!

0

(நா.தனுஜா)


செம்மலை நீராவியடிப் பிள்ளளையார் ஆலய விவகாரத்தை நாளை கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயப்பகுதியில் நேற்று பௌத்த பிக்குகளும், சிங்கள மக்களும் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான செயற்பாடொன்றாகும்.

இனியும் இதனை சாதாரண விடயமென்று கருதிக்கொண்டிருக்க முடியாது. இது ஒரு பாரதூரமான பிரச்சினையாக நோக்கப்பட வேண்டியுள்ள நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்றத்தில் இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும்.
சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த பிக்குகளும், தென்பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்திருந்தனர்.

பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கப்பட்டிருந்த குருகந்த ரஜமஹா விகாரையின் பெயர்ப்பலகை வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பொலிஸாரும் வீதி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து அப்பெயர்ப்பலகையை கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அகற்றியிருந்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சர்ச்சை விவகாரம் பல நாட்களாகத் தொடர்ந்துவரும் நிலையில் , இதற்குத் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதேனும் முயற்சிகளை எடுத்திருக்கிறதா என்று வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top