தற்போது கண்டியில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மகாநாயக தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு

0

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,
மகாநாயக தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது கண்டியில் நடைபெற்று வருகிறது.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பதவிவிலகள் உள்ளிட்ட பலதரப்பட்ட விடையங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பின்போது மகாநாயக தேரர்களுக்கு விளக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

அதேவேளை முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாகப் பதவி விலகியதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், குற்றம் சுமத்தப்படாத பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறும் மகாநாயக தேரர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. D C





Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top