தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக ஹொரவப்பொத்தானை காவல்நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்கியபோது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சந்தேகநபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை விடுவிப்பதற்கா ஹொரவப்பொத்தானை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு இரண்டாரை இலட்சம் ரூபாவை இந்த நபர் இலஞ்சமாக வழங்குவதற்கு முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவிடம் இன்று முன்னிலைப்படுத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதன்போது, சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கை தொடர்பிலான தீர்மானத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

