கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

0

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக,  நாளைய தினம் கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண மாணவர் பேரவை என்னும் தலைப்பில்  இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி போராட்டங்களும், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்ட நிலையில் இதுவரை அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, துண்டுப் பிரசுரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசாங்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் கிழக்கு மாகாண மாணவர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சர்வமத தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் வர்த்தக நிலையங்களை மூடி உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை, துண்டுப் பிரசுரம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top