தொடரும் உண்ணாவிரத போராட்டம் களத்தில் கருணாவும் கோடிஸ்வரனும்.

0

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டத்தில் அவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதுடன் அவருக்கு இரு தடவைகள் முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டம் இன்று புதன்கிழமை (19) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் உண்ணாவிரத போராட்ட இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான க.கோடிஸ்வரன், வியாழேந்திரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் சமூகமளித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடினார்.

கடந்த இரண்டு தினங்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துவருகிறனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(பைஷல் இஸ்மாயில், காமில் நூர்தீன், ஹூதா உமர்)



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top