இறக்காமத்தில் நோன்பு பெருநாள் தொழுகை பெரும் திரளான மக்களுடன் இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மிகவும் அமைதியான முறையில் இன்று 05 இடம்பெற்றது.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை பெருநாள் தொழுகை பொலிஸ் பாதுகாப்பு ராணுவப்படை உதவியுடன் தொழுகை இடம் பெற்றது இதன்பின்
இறக்காமம் ஜும்ஆப்பள்ளி வாயல் தலைவர் ஏ.கே. றஊஃப் (மௌலவி) அவர்களால் விஷேட துஆப் பிராத்தனை ஒன்றும் மிகவும் உணர்வுபூர்வமான இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சகல மக்களும் கையேந்தி இந்த நாட்டில் நிலையான சமாதானம் உருவாக வேண்டும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் நாட்டில் சகல இன மக்களும் நிம்மதியாக வாழ இறைவன் அருள்புரிய வேண்டும் என பிரார்த்தனை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
இதே நேரத்தில் தொழுகைக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.வை.ஜெளபர் அவர்களுக்கும் பொதுமக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




