நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்...

0

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவின் சிலாபம் வீட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு அலுவலர் மீது, நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான, காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர், சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

எவ்வாறிருப்பினும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top