ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் புனரமைப்பு

0

(அகமட் எஸ். முகைடீன்)  

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் தனது நிதி ஒதுக்கீட்டில் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் புனரமைப்புச் செய்யப்படுவதனை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். 

இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த வேலைத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு ஏதுவாக மேலும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உறுதியளித்தார்.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களுக்கு அதிகளவான நிதிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் ஒதுக்கீடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top