நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நேற்றைய தினம் காவல்துறை தலைமையகத்தில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சாபி சிஹாப்தீன் தொடர்பில் மேற்கொண்டுவரும் விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என ரத்தன தேரர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய பதில் காவல்துறைமா அதிபர், இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

