உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறும் இலங்கை அணி

0

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும் அணிகளில் இலங்கையும் அடங்கும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரிவித்துள்ளார்.
அரையிறுதிக்கு முன்னேறும் ஏனைய நாடுகளாக அவுஸ்திரேலியா,இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன,
ஆனால் இங்கிலாந்து அணி நேற்று இடம்பெற்ற ஆப்கான் அணியுடனான போட்டியில் பாரிய ஓட்ட எண்ணிக்கையினால் வெற்றி பெற்றது,
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் முதல் 15 ஓவர்களுக்கான பந்து வீச்சு சிறப்பாக அமைந்திருந்தாக ஸ்டீவ் வோ குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும் தொடரின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரன் பின்ச் தெரிவாவார் என ஸ்டீவ் வோ கூறியுள்ளார்,
எனினும் ஷகீப் அல் ஹசன் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் துடுப்பாட்டத்தையும் ஸ்டீவ் வோ பாராட்டியுள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top