குருணாகல் வைத்தியசாலையில் 33,000 சிசேரியன் சிகிச்சைகள் குறித்து அவசர விசாரணை

0

குருணாகல் போதனா வைத்தியசாலையில், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை நிர்வாகப் பிரிவு இந்த தீர்மானித்தை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதிக்குள் 33,000 பேர் சிசேரியன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சிசேரியன் சிகிச்சையின் பின்னர் தாய்மார் குழந்தை பாக்கியத்தை இழந்துள்ளனரா என்பத தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த, மகப்பேற்று வைத்தியர் ஷாபியால் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக, குருணாகல் வைத்தியசாலையில் 1,000 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top