வைத்தியரொருவரின் உதவியுடன் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதி முற்றுகை.. 9 பேர் கைது.

0

கல்கிசை பிரதேசத்தில் வைத்தியரொருவரின் உதவியுடன் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில்
நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

அங்கிருந்து குறித்த வைத்தியரையும், விடுதியை நடத்திச்சென்ற நபரையும் மற்றும் உதவியாளர் ஒருவர் உள்ளடங்கலாக ஒன்பது பேரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த நபர்கள் 26, 20, 23, 27, 25, 49, 21 ஆகிய வயதுகளையுடையவர்களென்றும் தெரிவித்தனர்.

அத்துடன் கல்கிசை – விஜேவர்தன மாவத்தையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்றும் நேற்று (26) முற்றுகையிடப்பட்டதுடன், கல்கிசை – காலி வீதியில் அமைந்துள்ள மற்றுமொரு மசாஜ் நிலையமும் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து 3 சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் கால்கிசை – காலி வீதியில் பிறி​தொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top