இங்கிலாந்து தொடங்கும் உலகக்கோப்பை தொடரில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
12வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் வீரர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், ஒரு உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை, 2003ஆம் ஆண்டு(673 ஓட்டங்கள்) படைத்தார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்த சச்சின், ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று நடக்கும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் (இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா) சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளார். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவர் வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, SachinOpensAgain என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

