பள்ளிவாசல்களையும், வாள்களையும் காண்பிக்கும் மோசமான வேலையை செய்ய வேண்டாம் - பாராளுமன்றத்தில் கோரிக்கை

0


பள்ளிவாசல்களையும் வாள்களையும் ஊடகங்களில் காண்பித்து மோசமான வேலை செய்ய வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

முஸ்லிம் பள்ளிவாசல்களில் மட்டுமன்றி இந்த வகையான வாள்கள் பல்வேறு இடங்களிலும் காணப்படுகின்றன.

கடந்த 2010ம் ஆண்டு முதல் இதுவரையில் குறித்த வகையிலான வாள்களைக் கொண்ட பத்து கொள்கலன்கள் இலங்கைக்கு சினாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த வாள்கள் ஹார்ட்வெயார்களில் காணப்படுகின்றன, கரும்புச் செய்கையில் ஈடுபடுவோரை தேடிச் சென்றால் அங்கும் இந்த வகையான வாள்கள் இருக்கும்.

இலங்கையில் உள்ள எல்லா வீடுகளையும் சோதனையிட்டால் பாரியளவில் வாள்களை கண்டு பிடிக்க முடியும்.

இந்த வகையான வாள்கள் வைத்திருக்க முடியுமா இல்லையா என்பது குறித்த சட்ட நிலைப்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது வாதமாகும்.

என்னை விடவும் கனிஸ்ட ஊடகவியலாளர்களே வாள்களையும், பள்ளிவாசல்களையும் காண்பிக்கும் மோசமான வேலையை செய்ய வேண்டாம் என மரிக்கார் கோரியுள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top