கைதிகளுக்கிடையில் மோதல்: துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி! குவாட்டமாலா சிறைச்சாலையில் பதற்றம்!

0

குவாட்டமாலாவில் சிறைச்சாலையில் இருக்கும் இரு கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்க முரண்பாடு மேதலாக மாறியதால் சிறைச்சாலை வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பதற்றம் நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 கைதிகள் உயிரிழந்ததாகவும் 20 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன.
இந்த மோதலுக்கு காரணம் இரண்டு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதே என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அசம்பாவிதத்தையடுத்து, 1500 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சிறைச்சாலை வளாகத்திலும் சிறைச்சாலையை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top