பாடசாலை மாணவியை பேருந்தினுள் வைத்து துஷ்பிரயோகம் செய்த நடத்துனர் கைது

0

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை தனியார் பேருந்த ஒன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பேருந்தின் நடத்துனர் ஆணமடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 
நேற்று (08) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 
ஆணமடுவ – மஹஉஸ்வெவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக ஆணமடுவ நகரிற்கு வருகை தந்துள்ளார். 
இதன்போது சந்தேக நபர் குறித்த மாணவியை ஏமாற்றி தனது பேருந்தினுள் அழைத்து சென்று பேருந்திற்குள் வைத்தே துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளை தெரியவந்துள்ளது. 
துஷ்பிரயோத்திற்கு உள்ளான மாணவவி நடந்த சம்பவம் தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். 
அதனடிப்படையில் குறித்த மாணவியின் தாய் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரான பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். 
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top