வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து, பட்டதாரி பெண் தற்கொலை.

0





கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையின் 9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
31 வயதான கருண்யா சிங்காரவேல் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.


குறித்த வைத்தியசாலையில் மனித வள முகாமைத்துவ பிரிவின் உதவி முகாமையாளராக செயற்பட்ட பெண்யே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த பெண் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தனது அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளர். சற்று நேரத்தில் 9 வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.


உயிரிழந்த பெண் பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என தெரிவிக்கப்படுகிறது.


தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து, பட்டதாரி பெண் தற்கொலை
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top