சித்திரைப் புத்தாண்டுடன் பிரிக்கமுடியாத குயிலின் ஓசையில் மாற்றம்

0

சித்திரைப் புத்தாண்டும் குயிலின் ஓசையும், பிரிக்கமுடியாத ஒன்றாக இருக்கின்றபோதும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, தற்போதைய நிலையில், குயிலின் ஓசையை ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்திலேயே அதிகளவு செவிமடுக்கக்ககூடியதாக உள்ளதென சூழலியலாளர் ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

காகத்தின் கூடுகளிலேயே குயில்கள் முட்டையிடும்.

காகமானது, ஒரு பருவத்தில் இரண்டு முறை கூடுகளைக் கட்டும்போது, குயில்களும் அதனூடாக தமது இனப்பெருக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும்.

சில சந்தர்ப்பங்களில் வருடமொன்றிற்கு காகங்கள் 3 முறை கூடுகட்டி இனப்பபெருக்கத்தில் ஈடுபடும்.

இதன்போது குயில்களும் 3 தடவைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

காகங்களினதும், குயில்களினதும் இனப்பெருக்க செயற்பாடு சமாந்தரமாக இடம்பெறுவதனால், குயில்கள் அதிகளவு ஓசையை எழுப்பும் என சுற்றுச்சூழலியலாளர் ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இந்த ஆண்டில் காகங்கள் தமது கூடுகளை மிகவும் குறைந்த அளவிலும், தாமதமாகவும் அமைத்துள்ளன.

சில பகுதிகளில் தற்போதுதான் காகங்கள் கூடுகளை அமைத்துவருகின்றன.

இதன் காரணமாக, இனப்பெருக்க செயற்பாடு தாமதமடைவதனால் இந்த புதுவருட காலத்தில் குயிலின் ஓசையை அதிகளவில் செவிமடுக்க முடியாத நிலை ஏற்படும் என சூழலியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், அதிகளவு மழைவீச்சி இடம்பெறுதல் மற்றும் முகில்களுடனான வானிலை நிலவுதல் முதலான காரணங்களினாலும் குயில்களின் ஓசை குறைவடையும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த மாதமளவில் குயில்களின் ஓசையை அதிகளவில் செவிமடுக்கக்கூடியதாக இருக்கும் என சூழலியலாளர் ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top