நாயின் உயிரை காப்பற்ற முற்பட்ட நபர் பலி

0


பண்டாரகம, ஜனஹித மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கரவண்டி ஒன்று பாதையில் சென்ற நாயை காப்பற்ற முயற்சித்த போது கவிழ்ந்து சென்று எதிரில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் மற்றும் அவரது மனைவி பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 

பாணந்துரை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்தில் பலத்த காயமடைந்த பெண் பாணந்துரை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top