ஜபல் நகர் பள்ளிவாயல் இமாம்,முஅத்தினுக்கான சம்பளம் தொடர்பானது..
***
மதிப்பிற்குரிய நிர்வாகமே
பட்டணப் பள்ளியின் முன்னாள் இமாமும்
மத்ரிஸதுல் றிபானியா குர்ஆன் மத்ரிஸாவின் ஸ்தாபகராக இருந்து ஆயிரக்கணக்கான உங்களது குழந்தைகளுக்கு இலவசமாகு குர்ஆன் கற்றுக் கொடுத்வரும் தற்போதைய
ஜபல் நகர் பள்ளிவாயலின் முஅத்தின் மற்றும் இமாமுமாகிய எனது தந்தை
மதிப்பிற்குரிய உதுமாலெவ்வை காசீம் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கும்
மேலாக வெறும் 3000 ரூபாய் சம்பழத்திற்கே
இமாமாகவும் முஅத்தினாகவும் கடமை புரிந்து வருகிறார்
உங்ளுக்கும் எனக்கும் ஒரு நாள் சிலவிற்கு போதாத இந்த 3000 ரூபாய் சம்பளம் எவ்வாறு ஒரு மாத காலத்திற்கும் ஒரு குடும்பத்திற்கு போதுமென நீங்கள் நினைக்கிறீர்கள்???
எனவேதான் ஜும்ஆ பள்ளி நிர்வாகமே
நீங்கள் பெருமனம் கொண்டு இரண்டுக்கும் பொதுவாக இந்தப் பள்ளிவாயலுக்காக 8000 ரூபாய்களை ஊதியமாக வழங்மாறு தயவாய் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வண்ணம்
ஜெபுறாஸ் காசீம்
(அபூ மிஹாத்)
இறக்காமம் -04

