அரசாங்க சேவைகளில் இரண்டுமொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமையளிக்கவுள்ளோம். தமிழ் மொழி பேசுபவர்களுக்காக வழங்கப்படும்,111நியமனங்களுக்கும் மேலதிகமாக இந்த அரசாங்கம் 135பேருக்கு நியமனங்களை வழங்கியுள்ளதென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (01)நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது-

