நியூசிலாந்தில் தாக்குதல் நடாத்திய நபருக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவு

0

நியூசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் தாக்குதல் சந்தேகநபரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, நியூசிலாந்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு அவரின் மனநிலை சரியாக உள்ளதா என்பதை சோதிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சேர்ச்சில் உள்ள இரு மசூதிகளில் கடந்த மாதம் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
குறித்த கொலைக் குற்றவாளி மீது கொலை, கொலை முயற்சி என மொத்தம் 89 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொலையாளியை அவுஸ்ரேலியர் பிரென்ட்டன் டரான்ட் (வயது 28) பிணை கோரமுடியாத வகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top