ஆறு இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் - முக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள தகவல்கள்

0

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்ளுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனுதாபம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அந்த அனுதாபக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பவங்களில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது அனுதாபத்தை தெரிவிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, இலங்கையில் வாழ்கின்ற இந்திய மக்கள் தமது பாதுகாப்பு கருதி செயற்படுமாறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக் கொண்டுள்ளது
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top