நாட்டில் இடம்பெற்ற ஆறு வெடிப்பு சம்பவங்களில் 150 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 400 க்கும் மேற்பட்டோர் பேர் வரை காயமடைந்துள்ளனர்.
நீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது 67 உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக கட்டான காவல்துறை பொறுப்பதிகாரி எமது கெப்பிட்டல் நியூசிற்கு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் .
மேலும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மற்றுமொரு வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதோடு 70க்கும் மேற்பட்டோர் கவலைகிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சியோன் தேவாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அது மாத்திரமின்றி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் 45 பேர்வரை உயிரிழந்துள்ளதாக கொச்சிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரி எமது கெப்பிட்டல் நியூசிற்கு தெரிவித்தார்.
மேலும் 250 பேர்வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் போது காயமடைந்துள்ள பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு சினமன் கிரேண்ட மற்றும் சங்ரில்லா ஆகிய உணவகங்களில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிலர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டு பிரஜைகள் என தேசிய வைத்தியசாலை வட்டார தகவல்கள் குறிப்பிட்டுகின்றன.
காயமடைந்த 12 வெளிநாட்டு பிரஜைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக இரத்தம் தேவைப்படுவதாக தேசிய வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை , களுபோவில மட்டகளப்பு போதனா வைத்தியசாலைகளில் இரத்தத்தை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலையில் உள்ளவர்கள் இரத்தத்தை வழங்க முடியுமெனவும் அதனை உடனடியாக மட்டகளப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் நாட்டிலுள்ள மூன்று தேவாலங்களில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு 3 பிரபல உணவகங்களிலிம் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாடு முழுவதும் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே அனைத்து தேவாலயங்கள் , மதஸ்தலங்கள் , பொது இடங்கள் மற்றும் மக்கள் குழுமி இருக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் ஏற்பட்டு பதற்ற நிலைமையை அடுத்து அனைத்து காவல்துறையினரின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ரூவாண் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடமை நேர பொறுப்பதிகாரி எமது கெப்பிட்டல் நியூசிற்கு உறுதிப்படுத்தினார்.
அத்துடன் விமான பயணிகள் தவிர்ந்து ஏனையவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் அகற்றப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் கட்டுநாயக்க விமானநிலையில் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான பயணிகள் சுமார் நான்கு மணித்தியாலயத்திற்கு முன்னர் விமானநிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டு பதற்ற நிலைமையை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் தெரிவித்துள்ளார்
பொது இடங்களில் மக்கள் குழுமி இருப்பதை தவிர்க்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இணைந்து கொள்கின்றார் எமது அலுவலக செய்தியாளர் கே.பிரசாந்தன்.
மேலும் சம்வத்தை நேரில் பார்த்தவர்கள் எமது கெப்பிட்டல் நியூவிற்கு இவ்வாறு தமது கருத்து தெரிவித்தனர்.
இதேவேளை நாட்டில் இடம்பெற்றுள்ள இந்த வெடிப்பு சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக யாழ்ப்பான திருச்சபையின் பேராயர் டேனியல் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
மதரீதியான காழ்புணர்ச்சியால் இலங்கையின் சின்னாபின்னமாக்கும் விடயங்களை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழிபாடுகளுக்காக தேவாலயங்களுக்கு சென்றிருந்த மக்களுக்கு எதிராக இவ்வாறு வன்முறை கட்டிவிழ்த்து விடப்பட்டிருப்பதானது கண்டிக்கப்டவேண்டியதாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென யாழ்ப்பான திருச்சபையின் பேராயர் டேனியல் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது பொது மக்கள் மிகவும் நிதானமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படுமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.
இதன் போது இராணுவத் தளபதி,விமானப் படையின் தளபதி மற்றும் கடற்படையின் அதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் இதன் போது பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை நாட்டு மக்களின் துயரத்தில் தாமும் பங்கேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.,
அத்துடன் இந்த விடயம் தம்மை பேரர்திர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்,
இந்த திட்டத்திற்கு பின்னால் எவ்வாறான சதித்திட்டம் உள்ளதாக தாம் அறியவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.,
மக்கள் வீணாண அச்சங்களை ஏற்படுத்துவதை தவிர்த்து அமைதியாக இருக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.,
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கொடூரத் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்,
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவான நிலைமையில் ஒற்றுமையுடன் செயற்படுமாறு பிரதமர் கோருகின்றார்,
அத்துடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை எதிர்பாராத தாக்குதல்களினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முக்கிய அவதானத்தை செலுத்தியுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவி்ககின்றார்,
இது எந்தவொரு மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இல்லையனெவும் இது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது,
அத்துடன் வெடிப்பு இடம்பெற்ற சம்பவங்களில் குழுமியிருக்காமல் காவல்துறையின் விசாரணைகளுக்காக ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அரசாங்கம் கோருகின்றது,
பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாமெனவும் அமைதியாக செயற்படுமாறும் அரசாங்கம் மக்களை கேட்டுக் கொள்கின்றது,
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கெப்பிட்டல் நியூசு்ககு கருத்து தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து.

