யாழிலிருந்து சென்று வீதியில் வேலை செய்த இருவரை மோதித்தள்ளிய வேன்; சம்பவவிடத்திலேயே இருவர் பலி!

0

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சற்று முன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வான் வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் வீதி செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
வீதி செப்பனிடும் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தடைகளையும் மீறிச்சென்ற குறித்த வான், தொழிலாளர்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top