எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று மதியம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவத்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் துங்கிந்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய தந்னோருவ திஷானயகலாகே சேலி தம்மிகா திஷானாயக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த எட்டியாந்தோட்டை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கரவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(மலையக நிருபர் கிரிஷாந்தன்)

